மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 8 மற்றும் 13வது வார்டுகளில் வார்டு குழு கூட்டம் நடந்தது. 8வது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு சோழவந்தான் அரிமா சங்க தலைவரும் தொழிலதிபருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீர் மற்றும் சாக்கடை வசதிகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். 13 வது வார்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் வள்ளிமயில் மணிமுத்தையா தலைமை தாங்கினார். குழு உறுப்பினர்கள் சசிகலா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பணியாளர்கள் சோனை, வெங்கடேசன், பாலமுருகன் ஆகியோர் வார்டு மக்கள் பயன்பாடு பற்றி எடுத்து பேசினார்கள். இக்கூட்டத்தில் கழிப்பறை வசதி சின்டெக்ஸ் மற்றும் சாக்கடையை அகலப்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் வலியுறுத்தி பேசினார்கள் பணியாளர் சந்தோஷ் நன்றி கூறினார். இதே போல் மந்தைக்களம் பேரூராட்சி சமுதாயக்கூடம் ஆர்.சி. தெரு காளியம்மன் கோவில் தெரு, r.m.s காலனி நூலகம் ஆகிய இடங்களில் வார்டு குழு கூட்டம் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளில் உள்ள வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டில் உள்ள குறைகள் சம்பந்தமாக மனு அளித்தனர். மனுக்கள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.