மதுரையில் தமிழ்நாடு மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்களுக்கான மின்சாரவாரியத்தின் FIXED CHARGES மற்றும் PEAK HOUR கட்டண அறிவிப்பை திரும்பபெற கோரி வரும் 25 ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் தொழில் நிறுவனங்கள் கதவு அடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோரகள் கூட்டமைப்பால் நடத்தப்படும்.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் கொரோனா காலகட்டத்தை போல ஆயிரக்கணக்கான தொழில்நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்படும் எனவும், தொழில் நிறுவனங்களின் மின் கட்டண உயர்வால் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பால் அண்டை மாநிலங்களில் உள்ள உற்பத்தி பொருட்களை பொதுமக்கள் வாங்கும் நிலை உருவாகும்.
1 ரூபாய் செலுத்திய மின் கட்டணத்தை தற்போது 430 % உயர்த்தி தொழில் நிறுவனங்களை முடக்கும் வகையிலான மின் கட்டண உயர்த்தியுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்க தொழில்நிறுவனங்களை கொண்டுவர முயற்சி செய்யும் தமிழக அரசு சொந்த மாநிலத்தில் உள்ள தொழில்களை முடக்கும் நிலை உள்ளது குறித்து ஆலோசிக்க வேண்டும்.
PEAK HOUR மின் கட்டண விதிப்பிற்கான எந்தவித நடைமுறை இல்லாமல் தொழில் நிறுவனங்களிடம் இருந்து மின் கட்டணத்தை வசூலிக்கின்றனர்.
தொழில்துறை நிறுவனங்களில் சோலாரில் இருந்து மின்சாரம் எடுத்து பயன்படுத்துவதற்கும் மின் கட்டணம் வசூலிக்கும் நிலையை மின்வாரியம் உருவாக்கிவிட்டது. இதன்மூலம் எங்களது கரண்டுக்கு எங்களிடமே கட்டணம் வசூலிக்கின்றனர் என பேசினார்.