• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒற்றை காட்டு யானையால் தூக்கமின்றி தவிக்கும் மக்கள்

பொள்ளாச்சி அருகே ஒற்றை காட்டு யானையால் தூக்கமின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள்,காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர்.

பொள்ளாச்சி-ஜன-10 பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் சின்னார் பதி மலைவாழ் மக்கள் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆழியார் அணையை ஒட்டி வசித்து வருகின்றனர்,கடந்த சில நாட்களாக அருகிலுள்ள கேரளா தேக்கடி வனப்பகுதியில் இருந்து வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை சின்னார் பதி மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இரவு நேரங்களில் தினமும் குடியிருப்புப் பகுதிக்கு வருகிறத. அப்பகுதியில் உள்ள தென்னை மரம் மற்றும் மூங்கில் உண்பதற்காக குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு நள்ளிரவுகளில் மலைவாழ் மக்கள் அச்சத்துடன் தூக்கமின்றி தவிக்கின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் உயரமான இடங்களில் தங்கள் குழந்தைகளை கூட்டிக்கொண்டு விடிய விடிய உறங்காமல் தவித்துள்ளனர்.மலைவாழ் மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு யானை வராமல் இருக்க தீ மூட்டி வீடுகளை சேதாரம் பண்ணாமல் இருக்க காவல் காக்கின்றனர்.மேலும் கவியருவி பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கியிருக்கும் பகுதிகளிலும் உலா வருகிறது. வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வால்பாறை சாலையில் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.