• Sat. Oct 12th, 2024

“கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள்” – பாஜகவின் குஷ்பு கண்டனம்!

கோயம்புத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும், கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள் என்றும் பாஜக பிரமுகரும்,நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலை மீது காவி பொடி தூவி மற்றும் செருப்பு மாலை அணிவித்தும் அவமரியாதை செயலில் நேற்று மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டனர்.இதனையடுத்து, இதற்கு கண்டனம் தெரிவித்து,இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர்.


இந்நிலையில்,கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும்,இது ஒரு அவமரியாதை செயலின் தெளிவான அறிகுறியாகும் எனவும்,கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள் என்றும் பாஜக தேசிய செயற்குழு – சிறப்பு அழைப்பாளரும்,நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார்.


மேலும்,இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
“தந்தை பெரியார் பலராலும் போற்றப்படுகிறார்,அவரை நாம் மதிக்க வேண்டும்.ஆனால்,நேற்று கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.இந்த வெட்கக்கேடான செயலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.பெரியார் சிலைக்கு ஆரஞ்சு வண்ணம் தீட்டுவது ஒரு அவமரியாதை செயலின் தெளிவான அறிகுறியாகும்.கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள்”,என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *