
இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, புகார் மற்றும் விசாரணைக்கு வருபவர்கள், அதிகம்,குழந்தைகளுடன்,வரும் பெண்கள்,முதியவர்கள், காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்திருப்பதை,தினமும் காணமுடிகிறது. இதுகுறித்து,அங்கிருந்த சிலரிடம் கேட்டபோது,இங்கு வரும் புகார்கள் அதிகமாக குடும்ப பிரச்சனை சம்பந்தமாகவே உள்ளது.

இதனால் விசாரணைக்கு,குடும்பத்தோடு வந்து ஆஜராக வேண்டி, ஒரு புகாருக்கு இருதரப்பை சேர்ந்த சுமார் பத்துபேர் வருகின்றனர். சில பெண்கள் கைக்குழந்தையுடன் வருகின்றனர். அவர்கள் குழந்தைக்கு பாலூட்டுவதற்கு மறைவிடம் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
குடும்ப பிரச்சனை என்பதால் காவல்துறையினர் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பொறுமையாக பேசி சரிசெய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் அதிகநேரம் காத்திருக்கும் எங்களுக்கு, இருக்கை ,மற்றும், கழிப்பறை, வசதியில்லாமல், தரையில் அமரவேண்டிய நிலை தரை புழு பூச்சிகளுடன் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால், இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அடிப்படை வசதிகள் செய்து தந்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்றனர்.
