• Sun. May 17th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

அழகம்பட்டி கிராமத்தில் மக்கள் குடிநீர் தேடி அலையும் அவலம்..,

ByPuthar Pandian P

May 16, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா ஜம்புதுரைகோட்டை ஊராட்சி உள்ள அழகம்பட்டியில்300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திற்கு போதிய குடிநீர் வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் தான் சிண்டெக் தொட்டி வைத்து குடிநீர் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் மேல் நிலை தொட்டி கட்டப்பட்டு காட்சி பொருளாக உள்ளது
தற்போது சிண்டெக் தொட்டிகள் குடிநீர் ஏற்றப்படாமல் காட்சி பொருளாக இருக்கிறது சில நாட்களாக தொடர்ந்து குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிநீர் எடுப்பதற்கு நீண்ட தூரம் நடந்து சென்றும் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள், சைக்கிள், நடந்தும் தண்ணீர் எடுக்க தேடி தேடி அலைகின்றனர்.

சிலர் குடிநீர் விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் குடிநீர் வினியோகம் இல்லாமல் முதியோர், பெண்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அழகம்பட்டி கிராமத்தில் மக்களுக்கு குடிநீர் பஞ்சத்தில் தவித்து வரும் அவல நிலை போக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.