சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு 660 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.சமையல் எரிவாயு விலை கடந்த மாதம் 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை 965 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.965 ஆக இருந்தது. இன்று மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.1,015 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே 19 கிலோ வணிக எரிவாயுவின் விலை தற்போது சிலிண்டருக்கு ரூ.102.50 அதிகரித்து ரூ.2,355 ஆக உள்ளது. எனவே உணவகங்களில் டீ,காபி ,உள்ளிட்ட உணவுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயரத்தொடங்கியுள்ளது. ரூ1000 தை சிலிண்டர் விலைதொட்டதால் மக்கள் கடும் அதிர்சியடைந்துள்ளனர்.
சமையல் எரிவாயு விலை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி
