• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தென்கரை அகிலாண்டேஸ்வரி கோவிலில் கொடிமரம் விழுந்ததில் மக்கள் வேதனை..,

Byசோலைஆதி

Apr 5, 2026

சோழவந்தான் அருகே அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி கோவிலில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் இதுவும் ஒன்றாகும். கோவில் தெற்கு நுழைவாயிலில் அருகே நிழல் தரும் மிகவும் உறுதியான வெப்பமரம் ஒன்று இருந்தது. இந்த மரத்தின் நிழலில் பிரதோஷ அன்று நந்தி பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும்போது மரத்தடியில் நிழலில் இருந்து பக்தர்கள் அபிஷேகம் மற்றும் பூஜை பார்த்து வருகின்றனர்.

கோவில் நிர்வாகம் இந்த நல்ல பயன் தரக்கூடிய வேப்ப மரத்தை ஆட்கள் மூலமாக வெட்டுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இந்த மரத்தை வெட்டிய பொழுது அருகில் உள்ள மிகவும் உறுதியான கொடி மரத்தில் வெட்டிய மரம் விழுந்தது. இதனால் பீடத்துக்கு மேலே மூன்றடி போக மீதி கொடிமரம் ஒடிந்து சாய்ந்து கீழே விழுந்தது. இதன் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்த பொழுது கொடிமரம் ஒடிந்து விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நிர்வாகத்திடம் கேட்ட பொழுது இதை கேட்பதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது என்று முகத்தில் அடித்தது போல் பேசி உள்ளனர். இதற்கு வந்த பக்தர்கள் நாங்கள் ஏற்கனவே பட்டுப்போன மரங்களால் அருகில் உள்ள உச்சி மாகாளியம்மன்கோவில், இக்கோவில் கோபுரத்திலும், மேற்கு புறத்தில் உள்ள வீட்டிற்கு முன்பு பட்டுப்போன மரங்கள் விழுந்து வீடும் சேதம் அடைய உள்ளது. பட்டுப்போன மரத்தை நீங்கள் அப்புறப் படுத்துங்கள் என்று கூறினோம் நீங்கள் அகற்றாமல் பக்தர்களுக்கு நிழல் தரக்கூடிய நல்ல உறுதியான இந்த மரத்தை ஏன் வெட்டினீர்கள் என்று திரும்ப கேட்டதற்கு நீங்கள் கோவிலை விட்டு வெளியே போங்க என்று கூறியதாக பக்தர்கள் மனவேதனையில் கூறினர்.

இக்கோவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து இப்பகுதி பக்தர்களால் மற்றும் கிராம மக்கள் ஒன்று கூடி பல ஆண்டுகள் நிறுத்தப்பட்ட சித்திரை திருவிழா,சூரசம்கார விழா போன்ற முக்கிய திருவிழாக்களையும் கடந்த கும்பாபிஷேகத்திற்கு திருப்பணி வேலைகளையும் செய்து கோவிலுக்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். தற்போது ஒவ்வொரு பிரதோஷமும் தென்கரை அருகில் உள்ள கிராமத்தில் இருந்து இக்கோவிலுக்கு வரக்கூடிய அளவில் பிரதோஷ கமிட்டி மிக சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

கோவிலை வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு வரும் பக்தர்களையும், கிராமம் மக்களையும் உதாசீனப்படுத்தி பேசி மன வேதனை அடைய செய்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுத்துபட்டி கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். வருகிற 20 ஆம் தேதி சித்திரை திருவிழா மூர்த்தக்கால் நடப்பட்டு கொடியேற்றம் நடந்த திருவிழா தொடங்க உள்ள என்பது குறிப்பிடத்தக்கது.