• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

அதிமுகவில் இணைத்து கொண்ட பிகே.வைரமுத்து..,

ByS. SRIDHAR

Apr 5, 2026

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அதிமுக கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி பெரியார் நகரைச் சேர்ந்த திமுக மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவருமான சுதா சின்னையா மற்றும் பொன்னமராவதி பேரூராட்சி கவுன்சிலர் சுதா ரவி, முன்னாள் திமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டோருடன் பொன்னமராவதி பேருந்து நிலையத்திலிருந்து வலம் வந்து அதிமுக கட்சி அலுவலகத்தில் புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளருமான பி.கே.வைரமுத்து முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

அதிமுக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து கட்சி வேட்டி,சேலை மற்றும் சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் பொன்னமராவதி அஇஅதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலவயல் சரவணன், காசி.கண்ணப்பன், நகர செயலாளர் ராஜேந்திரன் மாநில, மாவட்ட ,ஒன்றிய,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.