• Wed. Apr 17th, 2024

அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 36,000 கோயில்களில் இயங்கி வருகிறது. இத்திருக்கோயில்களில் அனைத்து பணிகளும் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக தலைமையிலான அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதில் திருக்கோவில்களில் மொட்டை அடிக்க வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது. மேலும் மொட்டை போடும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 5,000 ரூபாய் வழங்கும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தமிழில் அர்ச்சனை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகராக விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆகம விதிகளின் படி பணி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சமயபுரம், திருச்செந்தூர், திருத்தணி கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து,அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை ரூ.1,000ல் இருந்து ரூ.3,000ஆக உயர்த்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களின் ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *