மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை 13 வது வார்டு சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல்- உமாராணி தம்பதியினர்.

தங்கவேல் (71) என்ற முதியவர் இன்று உசிலம்பட்டியில் இருந்து எழுமலைக்கு அரசு பேருந்தில் சென்று எழுமலை பேருந்து நிலையம் வந்து இறங்கிய பின்பு சிறிது தூரம் நடந்து சென்ற நிலையில் காலில் தங்கச் செயின் தென்பட்டுள்ளது.

அதனை எடுத்து அருகில் உள்ள நகைக்கடையில் பரிசோதித்து அது உண்மையான 1 1/2 பவுன் தங்கச் செயின் என அறிந்ததை அடுத்து.,
முதியவர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்திற்கு நேரில் வந்து உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேஷ் -டம் ஒப்படைத்தனர்.

இந்த தங்க செயினை உரிய நபரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்த டிஎஸ்பி.,
இந்த தம்பதியினரை பாராட்டி நன்றி தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்.,மேலும் இந்த நல்ல உள்ளம் படைத்த தம்பதியினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.



