மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பகுதியில் பாண்டி செல்வம் என்பவருக்கு சொந்தமான SPC கிரசர் செயல்பட்டு வருகிறது.

இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ராகுல் (24) என்ற வாலிபர் கடந்த மாதம் பணிக்கு சேர்ந்து அங்கேயே தங்கி பணியாற்றி வந்த சூழலில் செல்போனில் அதிக நேரம் மனைவியிடம் பேசிவிட்டு அங்குள்ள கல் உடைக்கும் இயந்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,
தகவலறிந்த வாடிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த பீகார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த வாலிபர் திருமணம் முடித்து ஒரு வருடமே ஆன நிலையில் மனைவியிடம் அடிக்கடி செல்போனில் பேசி தகராறில் ஈடுபட்டு வருவதால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



