• Thu. Apr 25th, 2024

பயணிகள் கவனிக்கவும் திரைப்பட தலைப்பை பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு

மறைந்த எழுத்தாளரும், இயக்குநருமான பாலகுமாரன்பயணிகள் கவனிக்கவும் என்கிற பெயரில் 1993ஆம் வருடம் ஆனந்தவிகடன் வார இதழில் எழுதிய தொடர்கதை பின்னர் நாவலாகவும் வெளியானது அந்தப் பெயரில் தற்போது திரைப்படம் ஒன்று தயாராகியுள்ளது அதுசம்பந்தமாக பாலகுமாரன் மகன் சூர்யா பாலகுமாரன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில்

ஊடக நண்பர்களுக்கு பணிவான வணக்கங்கள்

மறைந்த எழுத்தாளரும், சினிமா வசனகர்த்தாவுமான திரு. பாலகுமாரன் அவர்களின் மகன் சூர்யா பாலகுமாரன் பணிவன்புடன் எழுதிக்கொள்வது. அப்பா பாலகுமாரன் எழுதிய “பயணிகள் கவனிக்கவும்” என்கிற நாவல் மிகவும் புகழ் பெற்ற நாவல் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 1993 வருடம் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்து, அன்று முதல் இன்று வரை 10க்கு மேற்பட்ட பதிப்புக்களை ஏற்படுதிக்கொண்டிருக்கிற ஒரு உன்னதமான படைப்பு.
சில நாட்களுக்கு முன்பு அதே பெயரில் ஒரு திரைப்படத்தின் பெயர் போஸ்டராக வெளிவந்ததைக் கண்டு நானும் எங்களது குடும்பத்தாரும் கவலைக்குள்ளானோம். இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குனரோ, மக்கள் தொடர்பாளரோ எங்களிடம் இதைப் பற்றி தெரிவிக்கவோ, அனுமதி கேட்கவோ இல்லை. இதைத் தொடர்ந்து ஆஹா ஓ.டி.டி க்கும், ஆல் இன் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு எங்கள் குடும்ப நண்பரும் வழக்கறிஞருமான விஜயன் சுப்ரமண்யம் அவர்கள் மூலம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளோம். இதை தங்களின் பார்வைக்கு கொண்டு வரவேண்டும் என்பது என்னுடைய மற்றும் என் குடும்பத்தாருடைய விருப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *