போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின் நயன்தாராவுடன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்த பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தை இயக்கியுள்ளார், விக்னேஷ் சிவன். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீண்ட வருடங்களாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடியின் திருமணம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.