• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் நாடாளுமன்றத் தொகுதி பரப்புரை கூட்டம்.

தமிழகத்தின் உரிமைகளை ஒன்றிய அரசிடமிருந்து மீட்டு எடுக்கவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டு எடுக்கவும், பாசிசத்தை வீழ்த்தும், இந்தியா வெல்லட்டும் என்ற தி மு கவின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அறிவித்திருந்த பொதுக்கூட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன் நடைபெற்றது. நிகழ்விற்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான மனோ தங்கராஜ், ஆகியோருடன் சிறப்பு பேச்சாளராக, தமிழக பாடநூல் கழகத்தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி சிறப்பு பேச்சாளராக பங்கு கொண்டார்.

திண்டுக்கல் லியோனி பிரதமர் மோடி தமிழில் பேசுகிறேன் என நமது தமிழகத்தில் வந்து மட்டும் அல்ல. வெளி நாடுகளிலும், திருக்குறளையும், பாரதியாரின் பாடலையும் செய்யும் தமிழ் கொலை அனாகரிகமானது.

தமிழக முதல்வர் முயற்சியில் ஒன்றிணைந்துள்ள ‘இந்தியகூட்டணி’
நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக வெல்லும், வெல்லவேண்டும் என்ற கூட்டணி கட்சிகளின் கடுமையான உழைப்பின் உற்சாகத்தை இங்கே கூடியிருக்கும் தாய்மார்களின் கூட்டமே அடையாளம்.

தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ள மகளிர் உரிமை பணம்,இலவச பேருந்து பயணம், கல்லூரி கல்வியில் ரூ1000_ம் உதவித்தொகை,நான் முதல்வர் என்ற புரட்சி கரமான திட்டத்தை ஒவ்வொரு வீடுதோறும், ஒவ்வொரு தனி மனிதரிடம் பிரச்சாரம் செய்யுங்கள்.

இந்தியா சுதந்திரம் , இந்திய மக்களுக்கு கொடுத்துள்ள வேற்றுமையில் ஒற்றுமை என்ற மக்களின் மன உணர்வை சிதைக்கும் வகையில், மோடி கொண்டு வர முயலும் ஒரே நாடு,ஒரே குடும்ப அட்டை ஒரே உணவு என்பது, இந்திய நடைமுறைக்கு ஏற்புடையது அல்ல. என தெரிவித்தார் ஐ.லியோனி.