• Mon. Apr 29th, 2024

தொடர் விமர்சனங்களால் எழுத்துப்பிழையை சரிசெய்யும் விஜய் கட்சி

Byவிஷா

Feb 17, 2024

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என தனது கட்சியின் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், ‘க்’ சேர்க்க வேண்டும் என தொடர்ந்து வந்த விமர்சனங்களால் தற்போது எழுத்துப் பிழை சரி செய்யப்பட்டு, ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் புதிதாக கட்சி துவங்கி வரும் 2026ல் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கட்சியின் பெயர் தொடர்பாக எழுந்த விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு தமிழக வெற்றி கழகம் என்கிற பெயரில் மாற்றம் செய்ய இருக்கிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்கிற பேச்சு நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், சந்தேகத்திற்கு எல்லாம் விடை சொல்லும் விதமாக கடந்த பிப்ரவரி 2ம் தேதி, ‘தமிழக வெற்றி கழகம்’ எனத் தனது கட்சியை அறிவித்தார்.
ஊழலற்ற மற்றும் சாதி, பேதமற்ற கட்சி என்பதுதான் தனது நோக்கம் என்பதையும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும், வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் கூறினார். வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு எனக் கூறிய விஜய், இந்த இரண்டு ஆண்டுகளில் கட்சியை பலப்படுத்தப் போவதாகவும் கூறினார்.
முழுநேர அரசியல்வாதியாக களமிறங்க தற்போது நடித்து வரும் ‘கோட்’ படத்தையும், அடுத்து ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, சினிமாவை விட்டு விலகப் போகிறேன் எனவும் அறிவித்திருந்தார். தற்போது நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் பெயரில் ‘க்’ இல்லாமல் எழுத்துப் பிழை இருப்பதாக தொடர்ந்து எழுந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, இனி அவரது கட்சி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *