• Thu. Apr 25th, 2024

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில்

ByA.Tamilselvan

Feb 3, 2023

வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என புதுவை போக்குவரத்துதுறை ஆணையர் தகவல்.
புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …புதுவையில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, வாகனத்தின் பதிவுச் சான்று ஓராண்டிற்கு ரத்து செய்யப்படும். மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுனர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம். மேலும் புதுவையில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு முதல்முறை ரூ.ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர் உரிமத்தின் ஒரிஜினல் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *