• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பேப்பர்களை வைத்து பேப்பர் விநாயகர்.. அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!

Byகாயத்ரி

Aug 26, 2022

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் குப்பையில் போடும் பேப்பர்களை கொண்டு பேப்பர் விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளனர்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன். இவர் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சியை அளித்து வருகிறார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மாணவர்களுக்கு விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்தார். இதில் பள்ளியில் உள்ள பயனற்ற பேப்பர்களை கொண்டு விநாயகர் சிலைகளை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். 4.5 அடி உயரத்தில் ரசாயனம் எதுவுமின்றி சிலையை உருவாக்கியுள்ளனர். பயனற்ற பொருட்களை கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்கிய மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.