ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியவர்களை ஒன்று சேர்ப்பேன் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்தது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் இடம் கேட்டபோது

நைனார் நாகேந்திரனின் நல்ல மனதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலம் குறித்து கேட்டபோது எதிர்கால முடிவை பத்திரிக்கையாளர்களை சந்தித்து தெரிவித்து செல்வேன்.
செங்கோட்டையன் ஒருங்கிணைப்பு குறித்து கேட்டபோது செங்கோட்டையனின் முயற்சிக்கு முழு ஆதரவு. அவர் எடுக்கும் அனைத்து முடிவுக்கும் ஆதரவு. பத்து நாட்களுக்கு முடிந்த பின்பு அனைவரையும் அழைத்துக் கொண்டு பேசுவார்.
செங்கோட்டையனை உறுதியாக சந்தித்து பேசுவேன் என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.