• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி குழு கூட்டம்..!

Byவிஷா

Apr 3, 2023

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி குழு கூட்டத்தில், ரூ.3.75 கோடி நிதியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணிகளுக்காக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக மினி கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஆயிரப்பேரி தி. உதய கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலர் ருக்மணி மாவட்ட ஊராட்சி உதவி செயலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்று கூட்டத்தில் இடம் பெற்ற தீர்மானங்கள் மீது விவாதங்களுக்கு பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் அடிப்படை வசதிகளான குடிநீர் பணிகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி, மயானத்தில் தண்ணீர் தொட்டி, வாறுகால் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுக்காக ரூ. 3. 75 கோடி நிதியில் பணிகளை மேற்கொள்வதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்தில் இடம் பெற்ற ஆறு தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சந்திர லீலா, மதி மாரிமுத்து, சுதா, கனிமொழி, தேவி, சுதா, பூங்கொடி, மைதீன்பீவி, சுப்பிரமணியன், சாக்ரடீஸ், ராஜா தலைவனார், முத்துலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானங்களை நிறைவேற்றி தந்த உறுப்பினர்களுக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்ச்செல்வி நன்றியை தெரிவித்தார்.