• Wed. Dec 11th, 2024

மானூர் கூட்டுக்குடிநீர் தரைமட்டத் தொட்டியில் வீணாகும் குடிநீர்.., கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!

Byவிஷா

Apr 3, 2023

தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் அருகே உள்ள மானூர் கூட்டுக்குடிநீர் தரைமட்டத் தொட்டியில் இருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இலந்தகுளம் கிராமத்தில் மானூர் கூட்டு குடிநீர் தர மட்டத் தொட்டியில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாக செல்கிறது இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இதை சரி செய்து பொதுமக்களுக்கு குடிதண்ணீர் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.