• Thu. Jun 1st, 2023

பஞ்சராகி நின்ற விமானம்… வடிவேலு பாணியில் கைகளால் தள்ளு…தள்ளு.. தள்ளு…

Byமதி

Dec 3, 2021

சாலையில் பழுதாகி நிற்கும் பஸ், கார், லாரி போன்ற வாகனங்களை கையால் தள்ளி பார்த்திருக்கிறோம். ஆனால் விமானம் பஞ்சராகி பயணிகள் அதை தள்ளிய பாத்தீருக்கிங்களா..? அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நேபாளத்தில் நடந்துள்ளது.

நேபாளத்தில் உள்ள யீட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு பயணிகள் விமானம், பஜூரா மாவட்டத்தில் உள்ள கோல்டி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. அப்போது விமானத்தின் பின்பக்க டயர் வெடித்து பஞ்சாராகி ஓடுதளத்தில் நடுவில் நின்றதால் விமானத்தை நகர்த்த முடியவில்லை. இந்நிலையில் அதே ஓடுதளத்தில் மற்றொரு விமானம் தரையிறங்க முயன்று முடியவில்லை.


உடனே விமானத்தில் பயணித்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் விமானத்தை கைகளால் தள்ளி சென்றனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *