

விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் என பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், தந்து அடுத்த படம் யாருடன் என்பதை தற்போது அறிவித்துள்ளார்.
படத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்யும் விக்ரமும், படத்தில் பல்வேறு புதிய கருத்துக்களை வைக்கும் பா.ரஞ்சித்யும் கைகோர்க்கின்றனர்.
இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்சமயம் சீயான் 61 என்று அழைக்கப்பட்டு வருகிறது.
மற்ற நடிகர்கள் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
