கோவில் பஞ்சாமிர்தத்தில் ஊழலா உரிய நடவடிக்கை எடுக்குமா கோவில் நிர்வாகம் இணையத்தில் வைரலாகும் வீடியோ
அறுபடை வீடுகளில் முதன் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சார்பாக பிரசாத வடை முறுக்கு அப்பம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் விற்பனை செய்து வருகிறது இந்த நிலையில் அரை கிலோ(500) கிராம் எடை கொண்ட பஞ்சாமிர்தம் பாட்டிலை பக்தர் ஒருவர் வாங்கி உள்ளார் எடை குறைவதை உணர்ந்த அவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்து ஒருவர் பஞ்சாமிர்தத்தின் எடையை சரி பார்க்கச் சொன்னார்

.அப்பொழுது ஒவ்வொரு பாட்டிலிலும் ஒவ்வொரு விதமான எடையை காட்டியுள்ளது இதை கண்டு அதிர்ந்து போன அவர் கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்து வீடியோ பதிவை இணையத்தில் பதிவிட்டு வேதனையை வெளிப்படுத்தி உள்ளார் இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி சூரிய நாராயணன் இடம் கேட்ட பொழுது நான் இப்பொழுதுதான் பதவி ஏற்றி உள்ளேன் நேற்றுதான் எனக்கு புகார் வந்துள்ளது எனவும் புகாரின் உண்மை தன்மை அறிந்து நடவடிக்கை எடுப்பேன் என சொல்லிவிட்டு உடனடியாக இணைப்பைத் துண்டித்து விட்டார் சரியான வகையில் பதில் அளிக்காமல் மழுப்பலான பதிலை அவர் அளித்துள்ளார் இது எத்தனை நாட்களாக நடந்துள்ளது இதனால் யார் யாருக்கு எவ்வளவு லாபம் அடைந்தார்கள் என கோவில் பிரசாதத்திலே இவ்வளவு ஊழலா என பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது உரிய நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக மற்றும் கோவில் நிர்வாகம்