• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

தேர்தல் வாக்குறுதிகள் குறித்து துண்டு பிரசுரங்கள்..,

ByK Kaliraj

Feb 11, 2026

விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உட்பட்ட சத்திரப்பட்டி. சமுசிகாபுரம். அய்யனாபுரம். அட்டை மில் முக்குரோடு ஆகிய பகுதியில் அதிமுகவின் 2026 -சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகள் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராஜா பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் குறிச்சியார்பட்டி மாரியப்பன் ஏற்பட்டின்படி நடைபெற்ற கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜவர்மன். சுப்பிரமணியன் உள்பட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு வீதி வீதியாக சென்று வீடுகளில் மற்றும் கடைகளில் இருக்கும் பொது மக்களிடம் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அறிவித்த 2026 சட்டமன்ற வாக்குறுதிகளை எடுத்துக் கூறி துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது.

இதில் சாத்தூர் நகர செயலாளர் கிருஷ்ணன். வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன். பல்க் முனியசாமி. சாத்தூர் குருசாமி மற்றும் அதிமுக கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.