• Sun. Sep 8th, 2024

பழனிச்சாமியால் திமுகவை வீழ்த்த முடியாது-டிடிவி தினகரன் பேட்டி

Byp Kumar

Feb 24, 2023

துரோகம் என்பது பழனிச்சாமியின் மூலதனம், இரட்டைஇலை சின்னம் இருந்தாலும் பழனிச்சாமியால் திமுகவை வீழ்த்த முடியாது, ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும், அதிமுகவை பழனிச்சாமி பிராந்திய கட்சியாக மாற்றிவிட்டார் , கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்காக நாங்கள் 40சீட் கேட்டோம் ஆனால் பழனிச்சாமி தவறான முடிவால் ஆட்சி பொறுப்பிற்கு வரமுடியவில்லை
மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்களின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கோச்சடை பகுதியில் அலங்கரித்துவைக்கப்பட்ட அம்மாவின் திருவுருவப்படத்திற்கு அம்முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அம்மா பிறந்தநாளில் அம்மாவிற்கு மதுரையில் மரியாதை செலுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது தவறானவர்கள் கையில் இரட்டை இலை சின்னம் உள்ளது, பழனிச்சாமி ஆட்சி அதிகாரம் இருந்தபோதே லட்சியத்திற்காக தொடங்கப்பட்டது அமமுக, வியாபாரநோக்கோடு லாபத்திற்காக எடப்பாடியுடன் சிலர் இருக்கின்றனர்


.தமிழகம் முழுவதும் அமமுக வளர்ந்துவரும் இயக்கமாக மாறியுள்ளது, இரட்டை இலை துரோகிகளின் கையில் இருந்ததால் திமுக வெற்றி பெற்றது, பழனிச்சாமி வெற்றி என்பது பண பலம், ஆட்சி அதிகாரம் இருந்தால் வந்துள்ளது ஆட்சி பொறுப்பை வழங்கியிருந்தால் குப்பனோ சுப்பனோ இருந்தாலும் அதிகாரத்தில் இருந்திருக்கலாம், இரட்டை இலை சின்னம் இருந்தும் பழனிச்சாமியால் நாடாளுமன்ற, சட்டமன்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை, அதிமுக அழிவுக்கு காரணம் பழனிச்சாமியின் ஆணவம், அகங்காரமும் தான் காரணம், அதிமுகவை பழனிச்சாமி பிராந்திய கட்சியாக மாற்றிவிட்டார் என்றார்.
தேவர் திருமகனாரின் நினைவிடத்திற்கு கூட வர முடியாத அளவிற்கு அரசியல் தவறால் பழனிச்சாமியால் வர முடியவில்லை, அதிமுகவில் தற்போது உள்ளவர்கள் தொண்டர்கள் அல்ல; டெண்டர்கள், எங்களுக்கு துரோகம் செய்ததால் ஒரு சிலரை பார்த்து அச்சம் இருக்கலாம் அதனால் தான் சேர்க்கமாட்டேன் என்கிறார் பழனிச்சாமி
எனக்கு தகுதி இல்லை நான் தேவை இல்லை என்கிறார். ஆனால் ஆட்சி அதிகாரம் பணபலம் இருந்தும் திமுக ஆட்சிக்கு வருவதை பழனிச்சாமியால் தடுக்க முடியவில்லை, ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற முடியாது, பழனிச்சாமி மெகா கூட்டணி என்றார் ஆனால் தேமுதிக, பாமக வெளியேறிவிட்டது, வன்னியர் உள் இட ஒதுக்கீடு 10.5% அறிவித்து முறையாக நடைமுறைபடுத்த முடியாமல் மக்களை ஏமாற்றிவிட்டார், பாமக பழனிச்சாமியிடம் இருந்து நல்ல வேலையாக தப்பித்துவிட்டனர் வேண்டாம் என ஒதுங்கிவிட்டனர், ஒரு கண்ணில் வெண்ணைய் , ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல வன்னியர் உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. துரோகம் தான் பழனிச்சாமியின் மூலதனம் எனவும்,ஆட்சி அதிகார அகங்காரத்தால் பணத்தால் பழனிச்சாமி ஆட்டம் போடுகிறார், உச்சநீதிமன்றம் தீர்ப்பில் இந்த சுற்றில் பழனிச்சாமி தற்காலிக வெற்றிபெற்றுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் என்று கூறியுள்ளனர் ,தீர்மானத்தை பற்றி எதுவும் கூறவில்லை, அம்மா, எம்ஜிஆரின் சின்னம் பழனிச்சாமியிடம் கிடைத்தால் அது பின்னடவை சந்தித்துள்ளது.அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் திரண்டு செயல்பட்டால் திமுக என்ற தீய சக்தியை வெல்ல முடியும், அனைவரும் ஒன்றிணைந்து எங்களோடு வருவார்கள் .பழனிச்சாமி அம்மாவின் தொண்டராக உணரவில்லை அகங்காரத்தில் குதிக்கிறார், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்காக நாங்கள் 40சீட் கேட்டோம் ஆனால் பழனிச்சாமி தவறான முடிவால் ஆட்சி பொறுப்பிற்கு வரமுடியவில்லை
பழனிச்சாமி எப்போதும் திருந்துவதாக தெரியவதில்லை, நீதிமன்ற தீர்ப்பில் மேல் முறையீடு போகலாம், தேர்தல் ஆணையம் போகலாம் கட்சி இருப்பதால் மட்டும் சோபித்துவிட முடியுமா? இந்த தீர்ப்பு தற்காலிகமான தீர்வு தான் கிடைத்துள்ளது.பழனிச்சாமி தான் பொதுச்செயலாளர் என அறிவித்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது கூட்டணி பலத்தோடு இருக்கும் திமுகவை வீழ்த்த முடியாத நிலையில் பழனிச்சாமி உள்ளார், பணபலமும், மூத்த நிர்வாகிகளும் உடன் இருந்தால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது.எனது உயரம் எனக்கு தெரியும், நாடாளுமன்றத்தேர்தலில் எனது தலைமயில் கூட்டணி அமைக்கவில்லை, சுவாசம் உள்ளவரை போராடுவோம், அமமுக தான் அம்மாவின் இயக்கம்.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *