உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் நாளை நடைபெறுெம்கும்பாபிஷேககத்தை முன்னிட்டு வானிலிருந்து மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கா பழனிக்கு ஹெலிகாப்டர் வருகை புரிந்துள்ளது.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தனர்.
கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்களை எந்த வழியில் அனுப்புவது, அவர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டர் மூலம் கோபுர கலசங்கள் மீது பூக்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ராஜகோபுரத்தில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவுவதற்காக, தற்போது பழனிக்கு ஹெலிகாப்டர் வருகை தந்து பழனி ஆண்டவர் கலை கல்லூரியில் நிறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் சிறப்பு எந்திரம் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.