• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்- பாகிஸ்தான் வாரியத்துக்கு ரூ.738 கோடி நஷ்டம்

ByP.Kavitha Kumar

Mar 18, 2025

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.738 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஐசிசி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடிய போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டன.

இந்த போட்டியை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.869 கோடி செலவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள மூன்ற மைதானங்களை மேம்படுத்த, மற்றும் போட்டி ஏற்பாடுகள் என மொத்தம் பாகிஸ்தான் ரூ.869 கோடி செலவிட்டது. ஆனால் ஐசிசி நிதி, விளம்பரம் போன்றவை மூலம் வெறும் ரூ. 52 கோடி மட்டுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வருவாயாக கிடைத்துள்ளது. டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மிகக் குறைவாக இருந்தது. இதனால் 85 சதவீத முதலீட்டு இழப்பை சந்தித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் வாரியத்துக்கு ரூ.738 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக சாம்பியன்ஸ் டிராபி விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்களின் ஊதியத்தில் 90 சதவீதமும், ரிசர்வ் வீரர்களின் ஊதியத்தில் 87.5 சதவீதமும் பிடித்தம் செய்ய பிசிபி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.