• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்தில் படுகர் இன சிறுவர்கள்

எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு படுகர் இன சிறுவர்கள் பாரம்பரிய உடை அணிந்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இன மக்கள் தங்கள் குலதெய்வமான எத்தையம்மனை தெய்வமாக வணங்கி வருகின்றனஆண்டுதோறும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் எத்தையம்மன் பண்டிகை இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தங்கள் கிராமங்களில் எத்தை பண்டிகை கொண்டாடுவதற்கு முதல் நாள் கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள பேரகணி என்ற இடத்தில் அமைந்திருக்கும் எத்தை கோவிலுக்கு வாகனங்கள் மூலமாகவும் நடை பயணமாகவும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் படுகர் இன மக்கள் பேரகணி கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்தப்பட்டு வருகின்றனர் ஆடல் பாடலுடன் மிகவும் சந்தோஷமாக நடத்தப்பட்டு வருகின்றன பேரகணி செல்வதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு போண்டுவாத்தியங்களுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.