• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

நெல்லியாளம் நகரத்தில் சமத்துவ பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நகர செயலாளர் மு.சேகர் தலைமையில் பந்தலூர் பஜார் பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், நகர-ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.