


மாற்றம் இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை.
தனது மனதையே மாற்ற முடியாதவர்கள்,
எதை மாற்றப் போகிறார்கள்
பெரும்பாலான மாற்றங்கள்
ஏதோ ஒரு ஏமாற்றத்திலிருந்து தான் தொடங்குகிறது.

சில நேரங்களில் மாற்றத்தின் அலைகளில்தான் நமது வாழ்வின் உண்மையான திசையைக் காண்கிறோம்.
மாற்றம் வேண்டும் என்றால், முயற்சியை மாற்றுங்கள் இல்லை, முயற்சியை கூட்டுங்கள். முடிவு தானாக மாறும்.
காரியவாதிகள் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுயநலத்திற்காக தன்மானமேயின்றி பிறர் காலில் விழவும் சிறிதும் தயங்க மாட்டார்கள்.
சாதனை படைக்க தனித்து பயணமென்றாலும் துணிந்து செல்…
நீ சென்றடையுமிடத்தில் உன்னை வரவேற்க ஒரு உலகம் காத்திருக்கும்…
குழந்தைகளுடன் பழகிப் பாருங்கள்
நாம் எப்படி இருந்தோம் என்றுதெரியும்.
முதியவர்களுடன் பழகிப் பாருங்கள்
நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்று தெரியும்.
நேரமும், சூழ்நிலையும் மீண்டும் உங்கள் வாழ்க்கையில் திரும்பவும் வரும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. எனவே காலத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள் உங்களுக்கான நேரத்தை நன்கு பயன்படுத்தத் தெரிந்தாலே போதும், நீங்கள் வெற்றியின் பாதையில் நேராக சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று நம்பலாம்.
காற்று மாசுபாட்டை விட மன மாசுபாடு மிகவும் தீவிரமானது,
தூய்மையற்ற மனமே சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு அடிப்படைக் காரணம்…,
அனுபவம் இல்லாத வாழ்க்கையும், அனுபவிக்காத வாழ்க்கையும் வீண்தான்.
நீங்கள் சேர்க்கும் பணம் மற்றவர்க்குச் சொந்தம். நீங்கள் வாழும் வாழ்க்கை மட்டுமே உங்களுக்கு சொந்தம்.
எதுவுமே சரியில்லாத போதும் எல்லாம் சரி ஆகிவிடும் என்று நம்புவது தான் வாழ்க்கை.
வாழ்க்கை வாழ்வதற்கே தவிர இல்லாததையும் கிடைக்காததையும் நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல.

