• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 17, 2025

சுய ஒழுக்கத்திற்க்கான விதிகள்

நம்மில் பலர் சுயஒழுக்கம் என்பது சுயகட்டுப்பாடு என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் சுயகட்டுப்பாடு என்பது சுயஒழுக்கத்தில் ஒரு பகுதி மட்டுமே. சுயஒழுக்கம் என்பது பல விசயங்களை உள்ளடக்கியது என்றால் மிகையாகாது. சுயஒழுக்கத்திறக்கான விதிகளை இப்பதிவில் காண்போம்.

கோபம் நிறைந்த சூழலில் நீங்கள் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள்.

எந்த ஒரு விசயங்களுக்கும் தீர்வு காணும் போது அதற்கு மூன்று பக்கங்கள் இருப்பதை மனதில் கொண்டு முடிவினை மேற்கொள்வது சிறந்தது.

கோபமாக இருக்கும்போது மற்றவர்களுக்கு வேலைகொடுக்கவோ, முடிவுகளை மேற்கொள்வதோ கூடாது.

நீங்கள் எப்போதுமே மற்றவர்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். அனைவருடைய உதவிகளும் உங்களுக்கு தேவை என்பதை உணருங்கள்.

உங்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு கஷ்டங்களும் உங்களுடைய வாழ்வை உயர்த்துவதற்க்கான படிகள் என்பதனை உணருங்கள்.

நீங்கள் மற்றவர்களிடம் கேள்விகள் கேட்கும்போது அதற்க்காக அவர்களுடைய பதிலை முழுமையாக கவனியுங்கள்.

சில நேரங்களில் மற்றவர்களுடைய பதில் திருப்தியளிக்கவில்லை எனில் என்ன காரணத்திற்க்காக இந்த பதிலை கூறுகிறீர்கள் என கேட்கலாம். இதனால் அவர்கள் தவறுதலாக யோசித்து இருந்தாலும் கூட மாற்றிக்கொள்ள எண்ணுவார்கள்.

நீங்கள் எதை மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்களோ அதன் எதிர்விளைவு நிச்சயம் உங்களை வந்தடையும் என்பதை உணருங்கள்.

நீங்கள் மற்றவர்களுடைய செயலை நடப்புடன் கலந்தாய்வு செய்வது அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

நீங்கள் மற்றவர்களுடைய வாழ்கைமுறை மற்றும் விருப்பு வெறுப்புகளில் எக்காரணம் கொண்டும் தலையீடு செய்யாதீர்கள்.

மேற்குறிய விசயங்களில் கவனம் செலுத்தும்போது நமது சுயஒழுக்கம் மேம்படுவதை உணரமுடியும்.