• Sat. Feb 15th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 30, 2025

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை, காலால் நடப்பதற்கு பதிலாக, தலையால் நடப்பதைப் போன்றது…

புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது…

வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது…

பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்ப்பதால், நம்முடைய துன்பங்களை சகிக்க கற்றுக்கொள்கிறோம்…

மனிதனின் ஆசைக்கு அளவில்லை, அவன் ஆற்றலுக்கும் எல்லை இல்லை..

கவலையை விட மிகவும் கொடியது, ஒருவனிடம் உள்ள சந்தேகமே…

எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித் தான் வாய்ப்புகள் அதிகம் வரும்….

கொடுக்கும் கொடையை விட, கொடுப்பவனின் மனநிலையே அவனை அடையாளம் காட்டுகிறது…

எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அதற்கு முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான்…

விதியின் பலன் இல்லையென்றாலும், முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு…