• Sat. Feb 15th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 29, 2025

இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார்.

இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்….,
வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.
காரணம்,
முதலாவது வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது.
1×9=7
2×9=18
3×9=27
4×9=36
5×9=45
6×9=54
7×9=63
8×9=72
9×9=81
10×9=90

மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.
சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை…..,
சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்…
நான் முதல் வாய்ப்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன்.
இதன் மூலம் உங்களுக்கொரு உண்மையை புரியவைக்கப் போகிறேன்.
இந்த உலகம் உங்களை எப்படி விமர்சிக்கும் என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.
நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக எழுதியிருக்கின்றேன்.
அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்டவில்லை.
ஆனால்,
நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விஷயத்தைக் மட்டும் கவனித்து….
அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள்.
நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும்……,
இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.
ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம் கவனிக்கும்.
அதையே மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்…
இவைகளைக் கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள்.
உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,
உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் …..
உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.