சிந்தனைத் துளிகள்
வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுங்கள்!
லட்சுமி கடாட்ஷம் உங்களை தேடி வரும்
விளக்கு வழிபாடு என்பது, நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நமது வீட்டுக்கு தெய்விகப் பேரொளியும் லட்சுமி கடாட்சமும் ஒரு சேர வருவதாக ஐதீகம். பெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபட்டு, அதன் பிறகு அன்றைய வேலைகளைச் செய்யத் தொடங்கும்போது மனதில் உற்சாகமும் செயலில் ஒரு உத்வேகமும் பிறக்கும்.
புராண இதிகாச காலங்களில், நமது மகரிஷிகள் யாகங்களையும், ஹோமங்களையும் செய்து இறைவனை வழிபட்டனர். இப்போது இதுவே எளிமையாக்கப்பட்டு சகலரும் தங்களது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் விதமாக விளக்கு வழிபாடு, திருவிளக்கு பூஜை எனச் செய்யப்படுகின்றது. இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால், மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது. ‘காஸ்மிக் பவர்’ என்று சொல்லப்படும் பிரபஞ்ச சக்தியை நமக்குப் பெற்றுத் தரும் சிறிய வடிவிலான ஆன்டனா என்று கூட சொல்லலாம்.
விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளைப் போக்குவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இதனால்தான் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாகப் பெறலாம்.
விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது நல்லது. பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், அதை ஏற்றும் போது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது. விளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும் இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால், தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் எதுவும் அணுகாது. வெள்ளிக்கிழமை, வீட்டுவாசலில் மாக்கோலம் இட்டு, அதன் நடுவில் விளக்கை ஏற்றிவைத்து, வீட்டு பூஜையறைக்குள், அந்த விளக்கைக் கொண்டு வந்து வைத்தால், விளக்குடன் மகாலட்சுமியும் வீட்டுக்கு வருவதாக நம்பிக்கை. வீடுகளில் காலை மாலை இரண்டுவேளைகளிலும் விளக்கேற்றுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்க்கையை ஒளிமயமாக்கும். பொதுவாக விளக்கு ஏற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். விளக்கை ஏற்றியதிலிருந்து குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை வீசி அணைக்கக்கூடாது. வாயால் ஊதியும் அணைக்கக்கூடாது. விளக்கு என்றல்ல கற்பூரம், மெழுகுவர்த்தி என்று எதையும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. சாஸ்திரப்படி பஞ்சபூதங்களாக நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் நாம் வழிபடுவதால், ஒன்றால் ஒன்றை அணைக்கக்கூடாது. பூக்களால் சாந்தப்படுத்தி அணைக்க வேண்டும். இதையும் பெண்கள்தான் செய்ய வேண்டும். ஆண்கள் செய்யக்கூடாது. தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்.
- சிறப்பு ரயில்கள் மூலம் 2 மாதங்களில் 2 கோடி ரூபாய் வருமானம்!தென்காசி, மதுரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி – தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் மூலம் இரண்டரை […]
- என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என நினைக்கவேண்டாம்…சென்னையில் நடந்த போதைப்பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ” என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ள ஆவணி […]
- சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற மதுரை மாணவர்கள்..இந்தோ – நேபால் சர்வதேச அளவிலான போட்டிகள் நேபால் நாட்டில் கடந்த சில தினங்களாக நடந்து […]
- அதிமுக பிளவை கடந்து ஒன்றிணையும்.. சசிகலா உறுதி..அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு வென்றவருமான மாயத் தேவர் […]
- இபிஎஸ் மேடையில் … அவிழ்ந்து விழுந்த வேட்டியால் பரபரப்பு- வீடியோஎடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் கலந்து கொண்டகூட்டத்தில் தொண்டர் ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுத்ததால்பரபரப்புநேற்று கிருஷ்ணகிரி சென்று […]
- ஜக்கம்பட்டி புற்றுக்கோயில் ஆடித் தபசு விழா…தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் நாகராஜ சமேத நாகம்மாள் புற்றுக் கோயில் […]
- முதல்வருக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலைசெஸ் ஒலிம்பியாட்போட்டிகைளை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் 44-வது […]
- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் மழலை பாட்டு..!!44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக […]
- நடிகை கங்கனாவுக்கு திடீரென டெங்கு காய்ச்சல்…பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் […]
- சமையல் குறிப்புகள்முட்டை 65: தேவையான பொருட்கள்:முட்டை – 4 சின்ன வெங்காயம் – 5 மிளகாய் தூள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 12: விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் […]
- ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழை – வீடியோதென்கொரியாவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழையால் 9 பேர்பலி.தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் […]
- அழகு குறிப்புகள்சர்க்கரை ஸ்கிரப்:
- கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோஇந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் […]