

சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்கிற சொலவடையை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். விருந்துக்கு போன இடத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்தால், இது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பவர்கள் உண்டு.
இந்த வார்த்தையின் முழுமையான அர்த்தம் என்ன தெரியுமா? நண்பர்களே!
ஐப்பசி மாதம் வருகின்ற பௌர்ணமி தினத்தன்று அனைத்து சிவன் கோயில்களிலும், சிவனுக்கு வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் நடைபெறும். அதைத் தரிசித்தால் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் கிடைக்குமாம். இதனால்தான் ‘சோறு கண்ட இடம் சொர்க்கம்’ எனக் குறிப்பிட்டு வைத்தனர் நம் முன்னோர்கள். ஆனால், காலப்போக்கில் இந்தச் சொல் கேலி செய்யும் விதமாகவும் மாறி விட்;டது என்பதே உண்மை.