• Mon. Jan 20th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 2, 2024

எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த நினைக்காதீர்கள்.. சில உணர்வுகளை மனதுக்குள் கட்டுப்படுத்தினாலே போதும்.. பல பிரச்சனைகள் சரியாகி விடும்.

காலம் போடும் கணக்கை இறைவனை தவிர யாராலும் மாற்ற முடியாது.. அதனால் நல்லதை நினை.. நல்லதை செய்.. மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வான்.

வாழ்க்கை என்னும் பரீட்சையில் இதயம் சொல்லும் சொல்லை நம்பி தோல்வியடைந்து விடாதே.. உன் மூளையின் சொல் கேட்டு வாழ்க்கையில் முன்னேறி வெற்றி அடைந்து விடு.!

ஒரு துன்பத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்.. அந்தத் துன்பத்தை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பதே.!

பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை.. உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.!