• Fri. Apr 18th, 2025

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 1, 2024

நம்மிடமிருந்து உதிக்கும் வார்த்தைகளும் எண்ணங்களும் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு உரமாக இருக்க வேண்டும்.!

விழுவதும் எழுவதும் எனக்கு புதிதல்ல.. உதிக்கும் சூரியனை போல விழுந்தாலும் மீண்டும் எழுவேன்..!

நான் தவறி விழுந்தாலும் என்னை தூக்கி விட யாரையும் எதிர்பார்க்கவில்லை.. எனக்குள் ஒருவன் இருக்கிறான்.. அவன் தான் தன்னம்பிக்கை.!

எதை வீசினாலும் மட்கி அழிக்கும் மண்.. விதையை மட்டும் விருட்சமாக மாற்றுகிறது இதுதான் இயற்கை.!

வாழ்க்கையில் சில மனிதர்களிடம் கேள்வியையும்.. சில மனிதர்களிடம் பதில்களையும் எதிர்பார்க்காமல் இருப்பது மிகவும் நல்லது.!