
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்
மனநிறைவு அடைந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே.. கவலைகளை மனதில் சேமித்தால் வாழ்க்கை என்றும் துயரமே.!
கெட்டவர்கள் என்று எவரும் இல்லை.. நம் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.!
படுத்தே இருந்தால் படுக்கையும் நமக்கு பகையாகும்.. எழுந்து முயற்சி செய்தால் உலகமே நமதானது ஆகும்.!
மற்றவர்களை கீழே தள்ளி விடுவதினால் நாம் வலிமை அடைவதில்லை.. அவர்களை தூக்கி விடும் போது தான் நாம் வலிமை அடைகின்றோம்.!
உழைப்புக்கு பின் இரவில் ஓய்வு.. ஓய்வுக்கு பின் பகலில் உழைப்பு. இதுவே வாழ்க்கையை செழிமை ஆக்கும்.
சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.!
