சிந்தனைத் துளிகள்
• ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்..
ஒவ்வொரு நொடியும் துணிந்தால்
நாம் அனைத்தையும் வென்று விடலாம்.
• முடியும் என்று நம்புவோருக்கு எதுவும் முடியும்..
முயற்சி இல்லாத நம்பிக்கை
கப்பல் இல்லாத கடல் பயணம்
போன்றது என்பதை எப்போதும் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.
• மண்ணில் ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை..
மனதில் நம்பிக்கை இருக்கும் வரை நாம் தோற்பதில்லை.
• அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்.., அது
உங்களின் கடமையை பாழாக்கிவிடும்..,
கடமையைப் பற்றி கனவு காணுங்கள்
அது உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றும்.
• யோசனைகள் யாரிடம் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்.. ஆனால்
முடிவை நீ மட்டுமே எடு.