
சிந்தனைத் துளிகள்
• தவறான பதிலை காட்டிலும் மௌனம் சிறந்தது..
எதிரியை விட நாக்கினையே அதிகம் அடக்க வேண்டும்.
• ஆசை இல்லாத முயற்சியால் பயனில்லை அதே போல..
முயற்சி இல்லாத ஆசையாலும் பயனில்லை.
• உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட
உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே மிகச் சிறப்பு.
• திறமையின் மூலம் புகழைப் பெறலாம்.. ஆனால்
ஒழுக்கத்தின் மூலமே ஒரு மனிதன் சிறந்த மனிதன்
என்ற அடையாளத்தை பெற முடியும்.
• தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் இருட்டில்
நடந்தாலும் இமயம் வரை செல்லலாம்.
