ஊக்கமூட்டும் மேற்கோள்கள்
- வாழ்வின் விடை மரணம் எவராலும் மறுக்க முடியாது.. இடையில் வாழும் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள்.!
- துன்பமான சூழ்நிலையில் சிறிது புன்னகை செய்ய கற்றுக்கொண்டால்.. துன்பத்திலிருந்து வெளிவருவதற்கான மனவலிமை கிடைக்கும்.!
- வாழ்க்கை முழுவதும் கவலைகளை சேமித்து வைத்து.. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.!
- நம்மிடமிருந்து உதிக்கும் வார்த்தைகளும் எண்ணங்களும் அடுத்தவர்களின் வாழ்க்கைக்கு உரமாக இருக்க வேண்டும்.!
- விழுவதும் எழுவதும் எனக்கு புதிதல்ல.. உதிக்கும் சூரியனை போல விழுந்தாலும் மீண்டும் எழுவேன்..!
- நான் தவறி விழுந்தாலும் என்னை தூக்கி விட யாரையும் எதிர்பார்க்கவில்லை.. எனக்குள் ஒருவன் இருக்கிறான்.. அவன் தான் தன்னம்பிக்கை.!