• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல்..!

Byவிஷா

Mar 13, 2023

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
திரையுலகின் மிக உயரிய விருதான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5 மணியளவில் ஆஸ்கர் விருது விழா தொடங்கியது. இந்த விழாவினை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்குகிறார். சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வெல்லுமா? என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘நாட்டு நாட்டு’ பாடல் ஏற்கனவே கோல்டன் குளோபல் சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இசை அமைத்த கீரவாணிக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சந்திரபோஸ் எழுதிய பாடலுக்கு , கீழவாணிக்கு இசையமைத்திருந்தார். ‘நாட்டு நாட்டு’ பாடலை எழுதிய சந்திர போஸ் மற்றும் இசையமைத்த கீரவாணி ஆகிய இருவரும் ஆஸ்கர் விருதினை பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக, ஆஸ்கர் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ கால பைரவா, ராகுல் சிப்ளிகஞ்ச் ஆகியோர் பாடினர். பாடலில் இடம்பெற்றிருந்த பிரபல ஸ்டெப்களை நடன கலைஞர்கள் நடனமாடி அரங்கில் இருந்தவர்களை குஷிபடுத்தினார்கள். இந்த பகுதியை இந்திய நடிகை தீபிகா படுகோன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த ‘நாட்டு நாட்டு’ நடன அரங்கேறத்திற்கு ஆஸ்கர் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் தொடக்க உரையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பாலிவுட் திரைப்படம் என விழாவின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் குறிப்பிட்டார்.
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியான இந்தப்படம் உலகளவிக் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு விருதுகளையும் குவித்து வந்தது. இந்நிலையில் இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது வென்றிருக்கிறது. இதன்மூலம் ஆஸ்கர் விருது வென்ற 2வது இந்தியர் என்கிற பெருமையை இசையாமைப்பாளர் கீரவாணி பெற்றுள்ளார்.