விருதுநகரில், பிரசித்தி பெற்ற வாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் உள்ள, ஸ்ரீஹயக்ரீவர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பிளஸ்டூ அரசு பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. பொதுத் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வுகள் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக, வாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் உள்ள, ஸ்ரீஹயக்ரீவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீஹயக்ரீவர் சன்னதி மற்றும் சுவாமிக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்காக சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.