• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

ByA.Tamilselvan

Sep 28, 2022

தமிழகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் பணிகளை விரைந்து முடிக்க தமிழக உத்தரவுபிறப்பித்துள்ளது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு இந்த ஆண்டும் ஏற்படாமல் இருக்க தமிழகம் முழவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது பற்றி வெளியான அறிவிப்பில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சிறு பாலங்களுக்கு அடியிலுள்ள கழிவுகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும். மழைநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் கண்காணிக்கவும் ,வடகிழக்கு பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை,மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் தரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.