ஓரணியில்_தமிழ்நாடு கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 248- வது பூத் அகஸ்தீஸ்வர தெற்கு ஒன்றியம் அகஸ்தீஸ்வரம் பேரூர் பூஜை புரை விளையில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை அகஸ்தீஸ்வர தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

நிகழ்வில் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் கலந்து கொண்டு ஒவ்வொரு இல்லத்திற்கு சென்று கழக அரசின் நான்காண்டு சாதனைகளை பொது மக்களிடம் எடுத்து கூறி புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
உடன் மாவட்ட பிரதிநிதிதிரு. தமிழ்மாறன் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் திருமதி. தேவகி திருமதி. சந்திர கலா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
