இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால், தமிழகத்தில் நவ.25 முதல் நவ.28 வரை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிப் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இந்த தாழ்வு பகுதி வலுப்பெற்று பெங்கல் புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன் பிறகு தெற்கு அந்தமான் கடல் பகுதிகளிலிருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்நிலையில் தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த இரு தினங்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வங்க கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதோடு தமிழகத்திற்கு 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 4 தினங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.