• Sat. Apr 20th, 2024

ஊழல் பட்டியல் வெளியிடும் ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!

ByA.Tamilselvan

Jul 6, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 17 பேரின் ஊழல் பட்டியலை கையில் எடுத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு.இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது இபிஎஸ் தரப்பு
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை தொடங்கியது.
அப்போது, ‘உட்கட்சி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் தலையிட்டது சட்டத்திற்கு எதிரானது. உட்கட்சி விவகாரங்களில் தலையிட சென்னை ஐகோர்ட்டுக்கு குறைவான அதிகாரமே உள்ளது’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.அதேபோல், ‘உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தீர்வு காண முடியும்’ என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து, கடந்த 23-ம் தேதி சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு காலாவதியாகி விட்டது என்றும், சென்னை ஐகோர்ட்டின் அதிகாரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது என்றும், உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் தனி நீதிபதி தெரிவித்தார்.தொடர்ந்து, ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்கள் எப்படி தடை விதிக்க முடியும்..? பொதுக்குழு சட்டப்படி நடைபெற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.பொதுக்குழு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கைவிரித்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 17 பேரின் ஊழல் பட்டியலை கையில் எடுத்துள்ளது.ஜூலை 11-ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு முன்னதாகவே இந்த ஊழல் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *