• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

வங்கி கணக்குகளை முடக்க ஓபிஎஸ் கடிதம்

ByA.Tamilselvan

Jul 23, 2022
அதிமுகவின் வங்கி கணக்குகளை முடக்க ஓபிஎஸ் ஆர்.பிஐ இயக்குனருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவின் 7 வங்கிக்கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல ஆர்.பி.ஐ இயக்குனருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்,”சட்ட விதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக இபிஎஸ்நியமித்துள்ளார். அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்வரை ,கரூர் வைஸ்யா ,எஸ்பிஐ,இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 வங்கிக்கணக்கு பணப்பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.