• Thu. Dec 12th, 2024

ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த ‘தி கிரே மேன்’..!

Byவிஷா

Jul 23, 2022

அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள தி கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இப்படம் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ{க்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஃபஹீர் என்கிற ஹாலிவுட் படத்தில் நாயகனாக நடித்திருந்த தனுஷ், தற்போது அவெஞ்சர் பட இயக்குனர்கள் இயக்கியுள்ள தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள இப்படத்தில் நடிகர் தனுஷ் அவிக்சான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், அன்னா டி அர்மாஸ், ஜூலியா பட்டர்ஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
இப்படத்திற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிரமாக புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் தனுஷ் ஒன்றுவிடாமல் கலந்துகொண்டார். சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இந்தியா வந்த போதுகூட அவர்கள் தனுஷை முன்னிலைப்படுத்தி தான் தி கிரே மேன் படத்தை புரமோட் செய்தனர்.
படக்குழு இப்படி தனு{க்கு முக்கியத்துவம் கொடுத்ததால், படத்தில் தனு{க்கு செம்ம வெயிட்டான ரோல் இருக்கும் என ஆவலோடு சென்று படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நடிகர் தனு{க்கு மிகவும் சிறிய கதாபாத்திரம் மட்டுமே படத்தில் கொடுத்துள்ளனர். அவர் வரும் காட்சிகள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளன. இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிலர் கடுப்பில் இதற்கு தான் இவ்வளவு பில்டப்பா என ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். படத்தை இந்தியாவில் பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க வைத்துவிட்டு, அவர் தான் படத்தின் ஹீரோ என்கிற ரேஞ்சுக்கு புரமோட் செய்த படக்குழுவை தனுஷ் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.